» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கேப்டன் விராட் கோலியை கவர்ந்த ஆரஞ்சு நிற ஜெர்சி!!

சனி 29, ஜூன் 2019 5:43:12 PM (IST)இந்திய அணியின் புதிய ஜெர்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தனக்கு புது ஜெர்சி மிகவும் பிடித்துள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. லீக் ஆட்டங்களில் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில் இதுவரை ஆஸ்திரேலியா அணி மட்டும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் இந்தியா எஞ்சியுள்ள 3 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். நியூசிலாந்து அணியும் எஞ்சியுள்ள 2 போட்டிகளில் 1 போட்டியில் வென்றாக வேண்டிய சூழலில் உள்ளது. 

அதேசமயம் இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதிபெற முடியும் என்ற இக்கட்டான சூழலில் உள்ளது. இதனிடையே இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன.  இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இத்தொடரில் இங்கிலாந்து தான் ஆதிக்கம் செலுத்தும் என நினைத்தோம். ஆனால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சொந்தமண்ணில் இங்கிலாந்து அணி திணறுவது ஆச்சரியமாக உள்ளது.  இந்திய அணியின் புது ஜெர்சி  குறித்து கோலி கூறுகையில், "எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு போட்டியில் தான் இந்த ஜெர்சி அணிந்து விளையாடுவோம். இனிவரும் போட்டிகளிலும் இதே ஜெர்சி அணிந்து விளையாடுவோமா என்பது எனக்கு தெரியாது" என தெரிவித்தார்.

தோனி குறித்து கோலி கூறியதாவது:- அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். நாங்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். ஒன்றிரண்டு போட்டிகளை வைத்து அவரது திறமையை மதிப்பிட முடியாது" என கூறினார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory