» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவிடம் இலங்கை படுதோல்வி: அரை இறுதி வாய்ப்பு மங்கியது

சனி 29, ஜூன் 2019 10:34:34 AM (IST)உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரி்க்கா.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 204 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 37.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 206 ரன்கள் சேர்த்து 9 வி்க்கெட் வி்த்தியாசத்தில் வென்றது. 2-வது விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்து ஆம்லா 80 ரன்களிலும், டூப்பிளசிஸ் 96 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிெபறவைத்தனர்.தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த வெற்றி மூலம் தன்னோடு சேர்த்து இலங்கை அணியையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டது. 

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தோல்வி அடைந்ததால் அரையிறுதி சுற்றுக்குள் எளிதாக முன்னேறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. இனிமேல் இலங்கை அணி மீதமிருக்கும்இரு போட்டிகளில் வென்றாலும்  மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை நம்பி இருக்க வேண்டும்.அதாவது, இலங்கை அணி அடுத்து வரும் இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு எதிரான இரு போட்டிகளிலும் கட்டாயம் வெல்லவேண்டும். அடுத்ததாக, இங்கிலாந்துஅணி தன்னுடைய இரு போட்டிகளிலும் தோற்க வேண்டும். அதாவது இந்தியாவிடமும், நியூஸிலாந்திடமும் இங்கிலாந்து தோற்க வேண்டும். மேலும், பாகிஸ்தானும், வங்கதேசமும் தங்களுக்கு மீதமிருக்கும் இரு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். இவை எல்லாம் நடந்தால், இலங்கை அணி அரையிறுதிக்குள் செல்லும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory