» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டுமென்றே இந்தியா தோற்கும்: மாஜி பாக். வீரர் கணிப்பு

வியாழன் 27, ஜூன் 2019 4:58:05 PM (IST)

உலக கோப்பையில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்றுவதற்காக வேண்டுமென்றே அடுத்த ஆட்டங்களில் இந்தியா தோற்கும் என முன்னாள் வீரர் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், இந்த உலகக் கோப்பை போட்டியின் தொடக்கம் முதல் தோல்வியின்றி விளையாடி வந்த நியூஸிலாந்தின் வெற்றி நடைக்கு பாகிஸ்தான் தடை போட்டுள்ளது. 7 ஆட்டங்கள் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 7 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளது. மீதமுள்ள ஆட்டங்களை வென்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் சூழல் உருவாகியுள்ளது.

ஆனால் அப்படியொரு சூழல் உருவாக, இந்திய அணி அனுமதிக்காது என்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி. ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: இந்திய அணி இதுவரை 5 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற அவர்கள் விரும்பமாட்டார்கள். வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுடன் இந்திய அணி இனி விளையாடும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர்கள் எப்படி விளையாடினார்கள் என்று எல்லோரும் பார்த்தோம். இந்திய அணியினர் எப்படி விளையாட வேண்டும் என்று திட்டமிட்டிருப்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் வேண்டுமென்றே தோற்றார்கள் என மக்கள் கூறமாட்டார்கள். ஆனால் மக்கள் எவ்விதக் குறையும் கூறமுடியாத அளவுக்கு இந்திய அணியினர் விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார். பசித் அலி, பாகிஸ்தானுக்காக 1993 முதல் 1996 வரை 19 டெஸ்ட் மற்றும் 50 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory