» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை வென்றது பாகிஸ்தான்: அரையிறுதி வாய்ப்ப்பில் நீடிக்கிறது!!

வியாழன் 27, ஜூன் 2019 11:56:52 AM (IST)நியூசிலாந்து அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. கப்தில், மன்றோ இருவரும் இன்னிங்சை தொடங்கினர். கப்தில் 5 ரன் மட்டுமே எடுத்து ஆமிர் வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.மன்றோ 12 ரன், டெய்லர் 3, லாதம் 1 ரன் எடுத்து ஷாகீன் அப்ரிடி பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, நியூசிலாந்து 12.3 ஓவரில் 46 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. கேப்டன் வில்லியம்சன் 41 ரன் (69 பந்து, 4 பவுண்டரி) எடுத்து ஷதாப் கான் பந்துவீச்சில் சர்பராஸ் வசம் பிடிபட்டார். 

நியூசிலாந்து 26.2 ஓவரில் 83 ரன்னுக்கு 5வது விக்கெட்டை இழந்ததால், விரைவில் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நீஷம் - கிராண்ட்ஹோம் ஜோடி 6வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 132 ரன் சேர்த்தது. உலக கோப்பை போட்டிகளில் 6வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் சாதனையாக இது அமைந்தது.கிராண்ட்ஹோம் 64 ரன் (71 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன் குவித்தது. நீஷம் 97 ரன் (112 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), சான்ட்னர் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரிடி 3, ஆமிர், ஷதாப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 238 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பெர்குஷனின் 150 கி.மீ வேகத்தில் இமாம் உல் ஹக் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். இவருக்கு கப்தில் டைவ் அடித்து பிடித்த கேட்ச் ஆக்சிறந்தது. போல்டின் ஸ்விங் பந்தவீச்சில் பக்கர் ஜமான் 9 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு முகமது ஹபீஸ், பாபர் ஆசம் ஓரளவுக்கு நிதானமாக பேட்செய்தனர். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறுவதைப் பார்த்த வில்லியம்ஸன் தான் பந்துவீசவந்தார். இவரின் ஓவரில் ஹபீஸ் 32 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

4வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம், ஹரிஸ் சோஹைல் ஜோடி அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இருவரையும் பிரிக்க 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியவில்லை. பாபர் ஆசம் 65 பந்துகளிலும், சோஹைல் 63 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். பாபர் ஆசம் 120 பந்துகளில் தனது 10-வது சதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமல்லாமல் பாபர் ஆசம் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். ஆம் 57 இன்னிங்ஸில் அடைந்தநிலையில், பாபர்ஆசம் 68இன்னிங்ஸில் அடைந்தார்.

சிறப்பாக பேட் செய்த சோஹைல் 68 ரன் ேசர்த்திருந்தபோது ரன்அவுட் செய்யப்பட்டார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 126 ரன்கள் சேர்த்தனர். பாபர் ஆசம் 101 ரன்னும், சர்பிராஸ் அகமது 5 ரன்னும் சேர்த்து அணியை வெற்றி பெறவைத்தனர். 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் வென்றது. நியூஸிலாந்து தரப்பில் போல்ட், பெர்குஷன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்த ெவற்றியின் மூலம் பாகிஸ்தான் 7 போட்டிகளி்ல் 3 வெற்றிகள், தோல்விகள்,ஒருபோட்டி ரத்து என 7 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணிக்கு அடுத்தார்போல் வந்துவிட்டது. அடுத்துவரும் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் 11 புள்ளிகளைப் பெற்று அரையிறுதிக்குள் நுழைய அதிகமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கிலாந்து அணி அடுத்துவரும் இந்தியா, நியூஸிலாந்து அணியுடன் ஒருஆட்டத்தில் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழக்க நேரிடும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory