» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நடுவருடன் வாக்குவாதம்: கேப்டன் கோலிக்கு அபராதம்

ஞாயிறு 23, ஜூன் 2019 7:53:58 PM (IST)ஆப்கனுடனான போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்திய அணித் தலைவர் விராட் கோலிக்கு ஆட்ட ஊதியத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தின் சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்த 28வது லீக் ஆட்டத்தில் தடுமாறிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இந்த போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் பேட்டிங் செய்த பொழுது, முகமது சமி வீசிய பந்தில், டி.ஆர்.எஸ். முறையில் எல்.பி.டபிள்யூ. அவுட் கேட்டு விராட் கோலி நடுவரிடம் முறையிட்டார்.  ஆனால் அந்த பந்து ஸ்டம்பில் படாமல் மயிரிழையில் விலகிச் சென்றுள்ளது  டி.ஆர்.எஸ். முறையில் தெரிந்தது. 

ஆனால் பின்னர் நடுவருடன் இதுகுறித்து உரையாடிக் கொண்டிருந்த கோலி பின்னர் இரு கைகளையும் கூப்பியபடி நடுவரிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.  இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு ஆட்ட ஊதியத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக்குகுறிப்பில் போட்டிக்கான ஐ.சி.சி.யின் நடத்தை விதி 1 மற்றும் 2.1 ஐ மீறும் செயலில் கோலி ஈடுபட்டு உள்ளார். எனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதித்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.      


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Anbu Communications


CSC Computer EducationBlack Forest CakesThoothukudi Business Directory