» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டேவிட் வார்னர் அபார சதம்: வங்க தேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி

வெள்ளி 21, ஜூன் 2019 10:59:03 AM (IST)நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா - வங்க தேச அணிகள் இடையேயான உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டம் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன் எடுத்தது. அதிக பட்சமாக டேவிட்  வார்னர் 166 ரன்னும், ஆரோன் பிஞ்ச் (53) கவாஜா (89) ரன்னும் எடுத்தனர். 

பின்னர் 382 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக தமிம் இக்பாலும், சவுமியா சர்காரும் ஆடினர். சவுமியா சர்கார் 10 ரன் அடித்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெறியேறினார்.  அடுத்து வந்த ஷகிப்  அல் ஹசன் 41 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதைத்தொடர்ந்து வந்த முஷ்பிகுர் ரஹிம் தமிம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர். தமிம் இக்பால் அரை சதம் அடித்த சிறிது நேரத்தில் அவுட் ஆனார். அவர் 62 ரன் எடுத்தார். அடுத்து வந்த லிட்டான் தாஸ் 20 ரன்னிலும், மக்முதுல்லா 69 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 333 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 48 ரன் வித்தியாசத்தில் ற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory