» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரோகித் சர்மா அசத்தல் சதம் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!!

திங்கள் 17, ஜூன் 2019 8:40:24 AM (IST)உலக கோப்பை தொட­ரில் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான லீக் ஆட்­டத்­தில் ரோகித் சர்மா (140), கோலி (77), ராகுல் (57) கைகொ­டுக்க இந்­தி­யா­அ­பார வெற்றி பெற்­றது.

சர்­வ­தேச கிரிக்­கெட் கவுன்­சில் (ஐ.சி.சி.,) நடத்­தும் 12வது உலக கோப்பை ஒரு­நாள் கிரிக்­கெட் தொடர் இங்­கி­லாந்து மற்­றும் வேல்­சில் நடை­பெற்று வரு­கி­றது. இதில், மான்­செஸ்­ட­ரில் நேற்று நடைபெற்ற 22வது லீக் போட்­டி­யில் முன்­னாள் சாம்­பி­யன்­க­ளான இந்­தியா, பாகிஸ்­தான் அணி­கள் மோதின. உல­கமே எதிர்­பார்த்து காத்­தி­ருந்த இப்­போட்­டி­யில் டாஸ் வென்ற பாக்., கேப்­டன் சர்­ப­ராஸ் அக­மது முத­லில் பீல்­டிங்கை தேர்வு செய்­தார். இந்­திய அணி­யில் காயம் கார­ண­மாக ஷிகர் தவான் வில­கிய நிலை­யில், அவ­ரது இடத்­தில் தமி­ழக ஆல்-­ர­வுண்­டர் விஜய் சங்­கர் தேர்­வா­னார். பாகிஸ்­தான் அணி­யில் இமாத் வாசிம், ஷதாப் கான் இடம் பிடித்­த­னர். 

ஷிகர் தவா­னுக்கு பதி­லாக லோகேஷ் ராகுல் துவக்க வீர­ராக ரோகித் சர்­மா­வு­டன் கள­மி­றங்­கி­னார். இரு­வ­ரும் சிறப்­பான அடித்­த­ளம் அமைத்­த­னர். முக­மது ஆமிர் பந்­து­வீச்சை கவ­னத்­து­டன் ஆடிய நிலை­யில், மற்ற பவு­லர்­க­ளின் பந்து வீச்சை அடித்து நொறுக்­கி­னர். இதை­ய­டுத்து ஸ்கோர் ராக்­கெட் வேகத்­தில் பறந்­தது. எதி­ரணி பந்து வீச்சை நாலா புற­மும் பறக்­கச் செய்த ரோகித் சர்மா 34 பந்­தில் அரை­ச­தம் அடித்­தார். 17.3 ஓவ­ரில் இந்­தியா 100 ரன் கடந்­தது. சோயப் மாலிக் பந்தை சிக்­ச­ருக்கு விளா­சிய ராகுல், ஒரு­நாள் கிரிக்­கெட்­டில் தனது 3வது அரை­ச­தத்தை பதிவு செய்­தார். இவர் 69 பந்­தில் அரை­ச­தம் அடித்­தார். இந்த ஜோடியை பிரிக்க பாக்., கேப்­டன் சர்­ப­ராஸ் அக­மது கடு­மை­யாக முயற்சி செய்­தார்.

இநத ஜோடி முதல் விக்­கெட்­டுக்கு 136 ரன் (23.5 ஓவர்) சேர்த்த நிலை­யில், வகாப் ரியாஸ் பந்­தில் ராகுல் 57 ரன் (78 பந்து, 3 பவுண்­டரி, 2 சிக்­சர்) எடுத்து ஆட்­ட­மி­ழந்­தார். இதுவே உலக கோப்­பை­யில் பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக முதல் விக்­கெட்­டுக்கு எடுக்­கப்­பட்ட அதி­க­பட்ச ஸ்கோரா­கும். இதற்கு முன், 1996ல் நடந்த உலக கோப்பை கால் இ­று­தி­யில் பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இந்­தி­யா­வின் சித்து, சச்­சின் ஜோடி முதல் விக்­கெட்­டுக்கு 90 ரன் சேர்த்­தது தான் அதி­க­பட்­ச­மாக இருந்­தது. அடுத்து கேப்­டன் கோலி பொறுப்­பு­டன் விளை­யாட ரோகித், தனது அதி­ர­டியை தொடர்ந்­தார். ருத்­ர­தாண்­ட­வம் ஆடிய ரோகித் 85 பந்­தில் சதம் விளாச ரசி­கர்­கள் ஆர்ப்­ப­ரித்­த­னர். இது ஒரு­நாள் கிரிக்­கெட்­டில் ரோகித்­தின் 24வது சத­மா­கும். பொது­வாக ரோகித் சதம் கடந்­தார் என்­றால் இரட்டை சதம் நோக்கி பய­ணிப்­பார். இந்த முறை­யும் அதே பாணி­யில் தனது பய­ணத்தை தொடர்ந்­தார்.

இவ­ருக்கு கோலி கம்­பெனி கொடுக்க 34.2 ஓவ­ரில் இந்­தியா 200 ரன் கடந்­தது. அப்­போது இந்த போட்­டி­யில் இந்­தியா மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்­யும் என்ற எதிர்­பார்ப்பு காணப்­பட்­டது. இதை உறுதி செய்­யும் வகை­யில், கோலி 51 பந்­தில் அரை­ச­தம் அடித்­தார். இது ஒரு­நாள் போட்­டி­யில் இவ­ரது 51வது அரை­ச­த­மா­கும். கோலி 57 ரன் எடுத்த போது ஒரு­நாள் போட்­டி­யில் மிக விரை­வாக 11 ஆயி­ரம் கடந்த வீரர் என்ற சாதனை படைத்­தார். இவர் சச்­சின் சாத­னையை முறி­ய­டித்­தார். இந்த ஜோடி 2வது விக்­கெட்­டுக்கு 98 ரன் சேர்த்த நிலை­யில், ஹசன் அலி பந்தை தேவை­யில்­லா­மல ஸ்கூப் செய்து ரோகித் ஆட்­ட­மி­ழந்­தார். இவர் 140 ரன் (113 பந்து, 14 பவுண்­டரி, 3 சிக்­சர்) எடுத்து வெளி­யே­றி­னார். பின் கோஹ்­லி­யு­டன் பாண்ட்யா இணைந்­தார். முதல் 6 ஓவ­ரில் 18 ரன்­மட்­டுமே விட்­டுக் கொஆட்த முக­மது ஆமிர் கடைசி கட்­டத்­தில் பந்து வீச வந்­தார்.

இவ­ரது வேகத்­தில் பாண்ட்யா (26), தோனி (1) சரிந்­த­னர். பின் திடீ­ரென மழை வர ஆட்­டம் தடை­பட்­டது. பின் ஆட்­டம் துவங்­கிய போது பவுண்­டரி விளா­சிய கோலி 77 ரன் (65 பந்து, 7 பவுண்­டரி) எடுத்து முக­மது ஆமிர் பந்­தில் விக்­கெட்­கீப்­பர் சர்­ப­ராஸ் அக­ம­தி­டம் கேட்ச் கொடுத்து ஆட்­ட­மி­ழந்­தார். டி.வி, ரீப்­ளே­வில் பந்து கோலி பேட்­டில் படா­தது தெரி­ய­வந்­தது. இருந்­தும் 3வது நடு­வ­ரின் உத­வியை நாடா­மல் கோலி வெளி­யேற ரசி­கர்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர். கடைசி கட்­டத்­தில் விஜய் சங்­கர் (15), கேதர் ஜாதவ் ((0 கைகாக்க இந்­திய அணி 50 ஓவ­ரில் 5 விக்­கெட் இழப்­புக்கு 336 ரன்­கள் குவித்­தது. பாக்., தரப்­பில் முக­மது ஆமிர் 3, வகாப் ரியாஸ், ஹசன் அலி தலா 1 விக்­கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து கடின இலக்கை துரத்­திய பாகிஸ்­தான் அணிக்கு இமாம் உல் ஹக், பகார் ஜமான் இரு­வ­ரும் துவக்­கம் தந்­த­னர். இந்த ஜோடிக்கு புவ­னேஷ்­வர் குமார் வேகத்­தில தொல்லை கொடுத்­தார். வழக்­கம் போல் பும்­ரா­வும் நெருக்­கடி கொடுக்க ஸ்கோர்­ஆமை வேகத்­தில் நகர்ந்­தது. ஆட்­டத்­தின் 5வது ஓவரை விஜய் சங்­கர் வீசி­னார். இவர் வீசிய முதல் பந்­தில் இமாம் உல் ஹக் (7) எல்.பி.டபுள்யு., ஆனார். உலக கோப்பை தொட­ரில் அறி­முக வீரர் முதல் பந்­தில் விக்­கெட் வீழ்த்­தி­ய­வர்­கள் பட்­ட­யி­லில விஜய் சங்­கர் 3வது இடத்­தைப் பிடித்­தார். 

அடுத்து இளம் வீரர் பாபர் ஆசம் களம் வந்­தார். 13வது ஓவ­ரின் முடி­வில் பாக்., 50 ரன் கடந்­தது. அதி­ர­டி­யாக விளை­யா­டிய பகார் ஜமான் 59 பந்­தில் அரை­ச­தம் அடித்­தார். இவ­ருக்கு பாபர் ஆசம் கம்­பெனி கொடுக்க பாக்., 22வது ஓவ­ரில் 100 ரன் கடந்­தது. இந்த ஜோடி இர­ண­டா­வது விக்­கெட்­டுக்கு 104 ரன்­கள் சேர்த்த நிலை­யில், குல்­தீப் சுழ­லில் பாபர் ஆசம் (48) ஆட்­ட­மி­ழந்­தார். தொடர்ந்து அசத்­திய குல்­தீப் இம்­முறை பகார் ஜமான் (62) விக்­கெட்டை வீழ்த்த ஆட்­டம் பர­ப­ரப்­பா­னது. பாண்ட்யா வேகத்­தில் ஹபீஸ் (9) சரிந்­தார்.

பாண்ட்­யா­வின் அடுத்த பந்­தில் சோயப் மாலிக் டக்–­அ­வுட் ஆக ஆட்­டம் இந்­தியா வசம் திரும்­பி­யது. விஜய் சங்­கர் பந்­தில் கேப்­டன் சர்­ப­ராஸ அக­மது (12) போல்­டாக பாகிஸ்­தான் தோல்வி உறு­தி­யா­னது. இதை­ய­டுத்து இமாத் வாசி­மு­டன் ஷதாப் கான் இணைந்­த­தார். இந்த பந்­து­வீச்­சும் பீல்­டிங்­கும் பாக்., அணிக்கு கடும் நெருக்­கடி கொடுத்­தது. பாகி­ஸ­தான் அணி 35 ஓவர் முடி­வில் 6 விக்­கெட்­டு­களை இழந்து 166 ரன்­கள் எடுத்த நிலை­யில் மழை கார­ண­மாக ஆட்­டம் நிறுத்­தப்­பட்­டது. இந்த நேரத்­தில் டக்­வொர்த் லீவிஸ் விதிப்­படி பாக்., 252 ரன்­கள் எடுத்­தி­ருக்க வேண்­டும். அதா­வது 86 ரன்­கள் பின்­தங்கி இருந்­தது.

பின் ஆட்­டம் துவங்­கிய போது 40 ஓவ­ரில் பாக்., 302 ரன்­கள் எடுத்­தால் வெற்றி என இருந்­தது. அதா­வது 5 ஓவ­ரில் 136 ரன் எடுக்க வேண்­டும் என இருந்­தது. ஆனால் 40 ஓவர் முடி­வில் பாகிஸ்­தான் 6 விக்­கெட்­டு­களை இழந்து 212 ரன் மட்­டுமே எடுத்து படு­தோல்­வி­யு­டைந்­தது. இமாத் வாசிம் (46), ஷதாப்­கான் (20) அவுட்­டா­கா­மல் இருந்­த­னர். இந்­திய தரப்­பில் குல்­தீப் யாதவ், விஜய் சங்­கர். பாண்ட்யா தலா 2 விக்­கெட் வீழ்த்தினர். 

சதம் அடித்த ரோகித் சர்மா ஆட்டநா­ய­க­னாக தேர்வு செய்­யப்­பட்­டார். இந்த வெற்­றி­யின் மூலம் இந்­திய அணி இது­வரை விளை­யா­டிய நான்கு போட்­டி­க­ளில் 3 வெற்றி (தென் ஆப்­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, பாகிஸ்­தான்), ஒரு ஆட்­டம் ரத்து (நியூ­சி­லாந்து) என மொத்­தம் 7 புள்­ளி­க­ளு­டன் புள்­ளிப் பட்­டி­ய­லில் 3வது இடத்­திற்கு முன்­னே­றி­யது. அதே நேரம் 5 போட்­டி­யின் முடி­வில் 3 புள்­ளி­கள் மட்­டுமே பெற்ற பாக்., 9வது இடத்­தில் உள்­ளது. தவிர உலக கோப்­பை­யில் இந்­தியா 7வது முறை­யாக பாக்.,கை வீழ்த்தி வர­லாற்று சாதனை படைத்­தது.

புவ­னேஷ்­வர் வில­கல்

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான உலக கோப்பை லீக் போட்­டி­யி­லி­ருந்து காயம் கார­ண­மாக வில­கி­னார் புவ­னேஷ்­வர். அவர் போட்டியின் 5வது ஓவ­ரின் 4வது பந்தை வீசி­னார் வேகப்­பந்­து­வீச்­சா­ளர் புவ­னேஷ்­வர். அப்­போது, இவ­ரது இடது தொடை­யின் பின்­ப­கு­தி­யில் காயம் ஏற்­பட்­டது. தொடர்ந்து பவு­லிங் செய்ய முடி­ய­வில்லை. மைதா­னத்­தி­லி­ருந்து புவ­னேஷ்­வர் வெளி­யே­றி­னார். இவ­ருக்­குப்­ப­தில் மீத­முள்ள இரண்டு பந்­து­களை விஜய் சங்­கர் வீசி­னார். புவ­னேஷ்­வ­ருக்­குப்­ப­தில் ஜடேஜா பீல்­டிங்­கில் ஈடு­பட்­டார். புவ­னேஷ்­வ­ரின் வில­கல் இந்­திய ரசி­கர்­க­ளுக்கு வருத்­தத்தை அளித்­துள்­ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory