» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ப்ளே-ஆஃப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் அணி : கேப்டன் அஸ்வின் வேதனை

சனி 4, மே 2019 5:28:00 PM (IST)"பவர்-ப்ளேயில் கிறிஸ் கெயில், கே.எல்.ராகுல் ஆகியோரின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை" என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்தார்.

மொஹாலியின் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ப்ளே-ஆஃப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொண்டுள்ளது.அதேசமயம், ஐபிஎல் தொடரில் இருந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் கிங்ஸ்லெவன் அணி வெளியேறியது. இன்னும் ஒரு ஆட்டம் இருந்தாலும் அதில் வென்றாலும் ப்ளேஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாது.

இந்த போட்டி குறித்து கேப்டன் அஸ்வின் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாங்கள் எந்த இடத்தில் பலவீனமாக இருக்கிறோமோ அதைக் கண்டுபிடித்து சரி செய்வது அவசியம். குறிப்பாக பவர்ப்ளேயில் பந்துவீச்சிலும் மோசமாக செயல்பட்டோம், பேட்டிங்கிலும் மோசமாக செயல்பட்டோம். பவர்ப்ளே ஓவரில் கெயில், ராகுல் ஆகியோர் கடந்த ஆண்டு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஆனால், இந்த ஆண்டு சிறப்பாகச் செயல்படவில்லை, நல்ல தொடக்கத்தையும் அளிக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் மீதான அழுத்தம் காரணமாக இருக்கலாம்.

அடுத்த ஆண்டு எங்கள் பிரச்சினைகளை நாங்கள் சரிசெய்து வருவோம். பவர்ப்ளேயில்தான் நாங்கள் வெற்றிக்கான பல வாய்ப்புகளை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் இழந்துவிட்டோம். பவர்ப்ளே எங்களுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது.அதுமட்டுமல்லாமல் சில முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக இல்லாதது பின்னடைவு. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு சில சவால்கள் இருந்தன. வீரர்கள் காயம் அடைந்துவிட்டால், மாற்று தேர்வு செய்வதிலுமே, சில வீரர்கள் மட்டுமே வழங்கப்பட்டு, அதில் இருந்துதான் தேர்வு செய்ய வேண்டும் என சிலவாய்ப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தன. பல வகையில் இதை நல்லதாகவே பார்த்தோம். சிறந்த அணியாகவே ஒவ்வொருமுறையும் களமிறங்கினோம். எங்களால் முடிந்த அளவு சிறப்பாக விளையாடினோம். பல நல்ல விஷயங்கள் அணியில் நடந்தன, கிடைத்த மகிழ்சியோடு இருக்கிறோம்

சாம் கரன் சிறப்பாக பந்துவீசினார், பேட்டிங்கும் செய்தார். ஆனால் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்யும் போது, அவர்களுக்கு மாற்று வைத்திருக்க வேண்டும். நான் சொன்னதுபோல் பவர்ப்ளே எங்களுக்கு இந்த ஆண்டு முக்கிய பிரச்சினையாக இருந்தது. பெரும்பாலான போட்டிகளில் நாங்கள் வென்றதே நடுப்பகுதி ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும்தான். குறிப்பாக சாம் கரன், முகமது ஷமி ஆகியோரின் பந்துவீச்சு  வெற்றிக்கு காரணமாக அமைந்தது.  

ஆன்ட்ரூ டை மிகச்சிறந்த பந்துவீச்சாளர் ஆனால், கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டு அவரால் சிறப்பாக பந்துவீச முடியவில்லை. ஒருவேளை பேட்ஸ்மேன்கள் சிறப்பான பல தொழில்நுட்ப முறைகளுடன் பேட்டிங் செய்ய வந்ததால், அவரால் பந்துவீச முடியாமல் போயிருக்கலாம். இந்த தவறுகளில் இருந்து எங்கள் அணி வீரர்கள் அதிகம் பாடம் கற்றுக்கொண்டு இருப்பார்கள். இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory