» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரசிகர்கள் "தல” என்றே அழைக்கிறார்கள் : தோனி நெகிழ்ச்சி!!

வியாழன் 2, மே 2019 4:31:04 PM (IST)

தோனி என்று கூறுவதைவிட "தல” என்றே அழைக்கிறார்கள் என்று சி.எஸ்.கே. ரசிகர்கள் குறித்து தோனி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரின் 50-வது போட்டி நேற்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வி கண்டது. அதிரடியாக விளையாடிய தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  போட்டி முடிந்தபின்னும் ரசிகர்கள் கலையாமல் தல தல என்று ஆரவாரம் செய்து கொண்டே இருந்தனர். 

வர்ணணையாளர் தோனியிடம் ஏன் உங்களை எல்லாரும் தல என்று அழைக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர், எனக்கும் இது புதிதாகதான் இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டைட்டில் பாடலில் கூட தல தோனிக்கு என்று வரும். அப்போது எனக்கு என்னவென்று புரியவில்லை. ஆனால் நாட்டில் எங்கு சென்றாலும் என்னை தோனி என்று அழைப்பதில்லை, தல என்றுதான் அழைக்கிறார்கள். அப்போது நான் அவர்கள் சிஎஸ்கே ரசிகர்கள் என்று புரிந்துகொள்வேன். சென்னை ரசிகர்கள் ஆதரவு எனக்கு மட்டுமல்ல மற்ற வீரர்களுக்கும் மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. அதுதான் எங்களின் பலம், நாங்கள் அவர்களுக்கு மிகவும் கடமை பட்டிருக்கிறோம்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes


CSC Computer Education

Anbu Communications

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory