» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முதல் அணியாக வெளியேறியது கோலியின் ஆர்சிபி! - ராஜஸ்தான் நிலை கேள்விக்குறி!!

புதன் 1, மே 2019 11:55:08 AM (IST)ஐபிஎல் 2019 தொடரில் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் முதல் அணியாக கோலியின் பெங்களூரு அணி வெளியேறியது. பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற எந்தவித முடிவும் இன்றி நிறைவடைந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது. எனினும் டாஸ் முடிந்தவுடன் தீவிரமாக மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவது தடை பட்டது. இரவு 11.05 மணிக்கு மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் 5 ஓவர்களாக குறைத்து போட்டியை நடத்த முடிவு செய்தனர். 5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களை குவித்தது பெங்களூரு. 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 25 ரன்களை விளாசிய கோலியை அவுட்டாக்கினார் ஷ்ரேயாஸ் கோபால். தொடர்ந்து மூவரை அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார் கோபால். 

63 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் அணி தரப்பில் சஞ்சு சாம்சன்-லிவிங்ஸ்டோன் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியதால் 3 ஆவது ஓவர் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை எடுத்தது ராஜஸ்தான். 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 28 ரன்களை விளாசிய சாம்சனை அவுட்டாக்கினார் சஹல். அப்போது 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்களை எடுத்திருந்தது ராஜஸ்தான். மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் கைவிடப்பட்டது.  ராஜஸ்தான், பெங்கர் என இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டது. மழையால் ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது.  இதனால் கடைசி ஒரு ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  அப்போதும் ராஜஸ்தான் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற இதர அணிகளின் ஒத்துழைப்பும் அவசியம். இதனால் அந்த அணியின் பிளேவாய்ப்பும் கிட்டத்தட்ட சாத்தியமில்லாத நிலையிலேயே உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory