» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

காதல் மனைவிக்காக விராட்கோலியின் நெகிழ்ச்சியான ட்வீட்

செவ்வாய் 11, டிசம்பர் 2018 1:29:20 PM (IST)

ஓராண்டு கடந்துவிட்டதை தன்னால் நம்ப முடியவில்லை என்று தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து விராட்கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு, இவர்கள் இருவருக்கும் இதே நாளில் திருமணம் நடந்தது.முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் இந்த தம்பதியினருக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.விராட் கோலியும் தன்னுடையை காதல் மனைவிக்கு ட்விட்டரில் நெகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். 

ஓராண்டு கடந்துவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் நேற்றுதான் நடந்ததுபோல் இருக்கிறது. நேரம் வேகமாகச் சென்றுவிட்டது. இந்த நேரத்தில் என்னுடையை நெருக்கமான நண்பர்களுக்கும், என்னுடையை ஆத்ம துணைக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். அதேபோல், அனுஷ்கா பதிவிட்டுள்ள ட்வீட்டில், இது ஒரு சொர்க்கம். நேரம் போனதை நீங்கள் உணரவில்லை. நல்ல மனிதரை திருணம் செய்யும்போது சொர்க்கமாக இருக்கும். என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Anbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory