» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸியை வென்றது இந்தியா!!

திங்கள் 10, டிசம்பர் 2018 11:38:33 AM (IST)ஆஸ்திரலேியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் அசத்திய இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்த இடைவெளியில் விக்கெட்களை இழக்கத் துவங்கியது.  நேற்றைய ஆட்டத்தில் ஷேன் மார்ஷ் - டிராவிஸ் ஜோடி 12.1 ஓவர்கள் விளையாடி 20 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்டநேர முடிவில் மார்ஷ் 31 ரன்னுடனும், ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

இன்று 5வது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் (14), இஷாந்த் ‘வேகத்தில்’ வெளியேறினார். அஷ்வின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஷான் மார்ஷ் (60), டெஸ்ட் அரங்கில் தனது 10வது அரைசதத்தை பதிவு செய்தார். கேப்டன் டிம் பெய்ன் (41) ஆறுதல் தந்தார்.அடுத்து வந்த ஸ்டார்க் (28), பட் கம்மின்ஸ் (28) ஓரளவு கைகொடுத்தனர். அஷ்வின் ‘சுழலில்’ ஹேசல்வுட் (13) சிக்கினர்.

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 291 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. லியான் (38) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா, அஷ்வின், ஷமி தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் 14ல் பெர்த்தில் துவங்குகிறது. நிலைத்து நின்று முதல் இன்னிங்க்ஸில் 123 ரன்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 71 ரன்களும் அடித்து வெற்றிக்கு காரணமாக அமைந்த புஜாரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesCSC Computer Education

Anbu Communications


Nalam PasumaiyagamThoothukudi Business Directory