» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விரைவாக 200 விக்கெட்டுகள்: 82 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாக்.வீரர்!!

வியாழன் 6, டிசம்பர் 2018 4:17:35 PM (IST)



விரைவாக 200 விக்கெட்டுகள் எடுத்து 82 ஆண்டுகால சாதனையை பாகிஸ்தான் வீரர் யாஷிர் ஷா முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி  நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், 4 ஆம் நாளான இன்று, நியூசிலாந்து அணியின் வில் சோமர்வில்லேவை ஆட்டமிழக்கச்செய்த பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 200 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

33-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் யாஷிர் ஷா, அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 82 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த 1936 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் கிளர்ரே கிரிம்மெட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எடுத்து இருந்ததே சாதனையாக இருந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


Joseph Marketing




Thoothukudi Business Directory