» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒடிஸாவில் உலகக் கோப்பை ஹாக்கி கோலாகலத் தொடக்கம்: ஷாருக் - ஏ.ஆர்.ரஹ்மான் கலைநிகழ்ச்சிகள்!!

புதன் 28, நவம்பர் 2018 11:01:14 AM (IST)உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. 

உலகக் கோப்பை போட்டியில் கடந்த 1975-ஆம் ஆண்டு அஜித் பால் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் ஆனது. தற்போது 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்தைப் பிடிக்கும் முனைப்பில் மன்பிரீத் சிங் தலைமையிலான அணி களம் காண்கிறது. 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான இந்தியா, உலகக் கோப்பை ஹாக்கியில் ஐரோப்பா, நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலிய அணிகளின் ஆதிக்கத்தை தகர்க்க போராடி வருகிறது. அந்த அணிகளே கடந்த 40 ஆண்டுகளாக பதக்கங்களை தட்டிச் சென்று வந்துள்ளன.

எனவே, உலகத் தரவரிசையில் தற்போது 5-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, இம்முறை அரையிறுதிக்கு முன்னேறுவதை முதல் இலக்காகக் கொண்டுள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் (2010) நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 8-ஆவது இடத்தையே பிடித்தது. இந்த ஆண்டு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது பட்டத்தை தக்க வைக்கத் தவறியதை அடுத்து, பயிற்சியாளர் ஹரேந்திர சிங்குக்கான வாழ்வா-சாவா போட்டியாக, இந்த உலகக் கோப்பை மாறியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் அணியை உலகக் கோப்பை வெல்லச் செய்திருந்த ஹரேந்திர சிங், அந்த அணியிலிருந்த இளம் வீரர்கள் 7 பேரை இந்த சீனியர் உலகக் கோப்பைக்கான அணியில் சேர்த்துள்ளார்.

அவர்களோடு, அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களான மன்பிரீத் சிங், ஸ்ரீஜேஷ், ஆகாஷ்தீப் சிங், வீரேந்திர லக்ரா ஆகியோர் உள்ளனர். அத்துடன் தில்பிரீத் சிங், முதல் முறை வீரர் ஹார்திக் சிங் ஆகியோரும் இணைந்துள்ளனர். 2002-ஆம் ஆண்டுக்குப் பிறகு 16 அணிகள் பங்கேற்பது இது 2-ஆவது முறையாகும்.
சி பிரிவில் இந்தியாவுடன், தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், கனடா அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா, கனடா அணிகளை எளிதாக எதிர்கொள்ளும் இந்தியாவுக்கு சவாலானது உலகின் 3-ஆம் நிலையில் உள்ள பெல்ஜியம் அணியாகும்.தொடக்க விழா: உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழா புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் நடிகர் ஷாருக் கான், நடிகை மாதுரி தீக்ஷித், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருடன், 1100 கலைஞர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த தொடக்க நிகழ்ச்சியில் 16 அணிகளின் கேப்டன்களுடன், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் கலந்துகொண்டார்.

இன்றைய ஆட்டம்
பெல்ஜியம் - கனடா
நேரம்: மாலை 5 மணி
இந்தியா-தென்னாப்பிரிக்கா 
நேரம்: இரவு 7 மணி
இடம்: கலிங்கா மைதானம்
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டிடி


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education

Joseph Marketing
Anbu CommunicationsThoothukudi Business Directory