» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஷிகர் தவனின் அதிரடி ஆட்டம் வீண் : டி20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி

புதன் 21, நவம்பர் 2018 7:46:57 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற  ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் சாஹலுக்குப் பதிலாக கிருனால் பாண்டியா இடம்பெற்றார். 16.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. அப்போது மேக்ஸ்வெல் 46, ஸ்டாய்னிஸ் 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இருவரும் கடைசி 5 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்து ஆட்டத்தை ஆஸி. அணிக்குச் சாதகமாக மாற்றினார்கள்.

இதன்பிறகு 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. கடைசியில், ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. 17-வது ஓவரை வீசிய பூம்ரா, 6 ரன்கள் மட்டும் கொடுத்து மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆஸி. அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 46 ரன்கள் எடுத்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களில் கலீல் அகமது 3 ஓவர்களில் 42 ரன்களும் கிருனால் பாண்டியா 4 ஓவர்களில் 55 ரன்களும் கொடுத்து இந்திய அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தினார்கள். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணியில் ஷிகர் தவன் ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ரோஹித் சர்மா 7 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகும் ஷிகர் தவன் மட்டுமே அதிரடி ஆட்டத்தின் மூலம் தொடர்ந்து ரன்கள் குவித்தார். 28 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ஆனால் மற்ற பேட்ஸ்மென்கள் கை கொடுக்கவில்லை. தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பந்தும் எதிர்பாராதவிதமாக 3.3 ஓவர்களில் 50 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். டை வீசிய 14-வது ஓவரில் இருவரும் இணைந்து 25 ரன்கள் குவித்தார்கள். இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை அடைந்தது. எனினும் முக்கியமான கட்டத்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார் பந்த். இதனால் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டது. 

ஆனால், இந்திய அணியால் அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. கிருனால் பாண்டியாவும் தினேஷ் கார்த்திக்கும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தார்கள். தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 17 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் முதல் டி20 ஆட்டத்தை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது . 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing


Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam


New Shape Tailors

Anbu Communications



Thoothukudi Business Directory