» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸி.யில் பொறுப்புடன் ஆடுங்கள்: பேட்ஸ்மேன்களுக்கு கேப்டன் கோலி அறிவுரை

வெள்ளி 16, நவம்பர் 2018 4:59:53 PM (IST)

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முன்னிட்டு பேட்ஸ்மேன்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.

வரும் 21-ஆம் தேதி தொடங்கும் 4 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வியாழக்கிழமை ஆஸி.புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் சுற்றுப்பயணத்துக்கு முன்பு கேப்டன் கோலி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெளலர்கள் தங்கள் இருப்பை ஏற்கெனவே நிரூபித்து விட்டனர். டெஸ்ட்களில் 20 விக்கெட்டுகளை முழுமையாக வீழ்த்துகின்றனர். சிறந்த அளவு மற்றும் வேகத்துடன் பந்துவீசுகின்றனர். 

அதே நேரத்தில் பேட்ஸ்மேன்கள் தங்கள் இருப்பை உணர்த்த வேண்டிய தருணம் வந்துள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் லார்ட்ஸ் டெஸ்ட் தவிர ஏனைய ஆட்டங்களில் நாம் அனைத்து விக்கெட்டை இழக்கவில்லை. அத்தொடர் முழுவதும் பகுதி பகுதியாக பேட்டிங் செய்தோம். நாம் அணியாக பேட்டிங் செய்யவில்லை என்றால் நிலைகுலைந்து தோல்வியடைகிறோம். இதனால் மன உளைச்சலும் அடைகிறோம்.

எந்த சூழ்நிலையையும் சமாளிப்பது குறித்து வீரர்களிட் அணி நிர்வாகம் ஆலோசித்துள்ளது. முந்தைய தோல்விகளை மனதில் கொள்ளாமல் தற்போதைய நிகழ்வை எதிர்கொள்ளும்மாறு கூறப்பட்டுள்ளது. வரும் ஆஸி. தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவர் என நம்புகிறேன். முந்தைய காலகட்டத்தில் கவனத்தை செலுத்தாமல், நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.கடந்த 2014 தொடரில் கடினமான சூழலில் இருந்த நாம், மீண்டெழுந்து வந்தோம். எனக்கும் இதே போல் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற சிறிய தவறுகளை களைய வேண்டும்.

பயிற்சியாளர் ரவிசாஸ்திரி: 

ஆஸி.யில் நடைபெறவுள்ள ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் எந்தவித சோதனை முயற்சியும் செய்ய மாட்டோம். இதில் இடம்பெறும் வீரர்களே இங்கிலாந்து உலகக் கோப்பை 2019-இல் விளையாடுவர். உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியா மொத்தம் 13 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே ஆடும் வாய்ப்புள்ளது. ஆஸி. மற்றும் நியூஸி தொடர்களே உள்ளன. உலகக் கோப்பையில் ஆடவுள்ள 15 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவோம். காயங்களும் அதிகளவில் இல்லை. 

ஆஸி.யில் 3 ஆட்டங்களும், நியூஸியில் 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் இந்தியா பங்கேற்கிறது. பின்னர் பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸி. அணி பங்கேற்கிறது . டெஸ்ட் ஆட்டங்கள் முற்றிலும் வேறுபட்டவை. முந்தைய தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்களில் இருந்து இந்திய வீரர்கள் தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். இதன் மூலம் ஆஸி.க்கு சவாலை ஏற்படுத்தலாம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing

New Shape TailorsThoothukudi Business Directory