» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தியோதர் டிராபிக்கான அணிகள் அறிவிப்பு: கம்பீர், யுவராஜ் சிங் புறக்கணிப்பு

வெள்ளி 19, அக்டோபர் 2018 5:05:15 PM (IST)

தியோதர் டிராபோ போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய ஏ ,பி, சி அணிகளுக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், யுவராஜ் சிங், கவுதம் கம்பீர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை

இதில் இந்திய ஏ அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாகவும், பி அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யரும், சி அணிக்கு ரஹானே கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மூன்று அணிகளிலும் முக்கியமான வீரர்கள் பலர் இடம் பெற்று இருப்பதால், தியோதர் டிராபி போட்டியில் செயல்படும் வீரர்கள் அடுத்து வரும் 3 ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிக்கும், ஆஸ்திரேலிய தொடருக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. மேலும், உலகக்கோப்பைக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருப்பதால், வீரர்களை தேர்வு செய்வதற்காக பிசிசிஐ இந்த முடிவு எடுத்துள்ளது. 

இதில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டு வந்த அஸ்வின், ரஹானே ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒருநாள் போட்டிக்கான தியோதர் டிராபியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியா ஏ அணியில் பிரித்வி ஷா, தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளனர். 150கி.மீ வேகத்துக்கு மேல் பந்துவீசக்கூடிய ஜார்கண்ட் வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இவர் இந்திய பி அணியில் விளையாட உள்ளார். இதனிடையே உலகக்கோப்பை கனவுடன் தீவிர பயிற்சியில் இருக்கும் யுவராஜ் சிங், கவுதம் கம்பீர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், இந்த வீரர்கள் ஓட்டுமொத்தமாக இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளது உறுதியாகிறது.

இந்தியா (ஏ)

தினேஷ் கார்த்திக்(கேப்டன்), பிரித்வி ஷா, அன்மோல்பிரித் சிங், அபிமன்பு ஈஸ்வரன், அங்கித் பாவ்னே, நிதின் ராணா, கருண் நாயர், குர்ணால் பாண்டியா, அஸ்வின், ஸ்ரேயாஸ் கோபால், முலானி, முகமது சிராஜ், தவல் குல்கர்னி, சித்தார்த் கவுல்

இந்தியா (பி)

ஸ்ரேயாஸ் அய்யர்(கேப்டன்), மயங்க் அகர்வால், ரிதுராஜ் கெய்க்வாட், பிரசாந்த் சோப்ரா, ஹனுமா விஹாரி, மனோஜ் திவாரி, அங்குஷ் பெயின்ஸ், ரோஹித் ராயுடு, கவுதம், மயங்க் மார்கண்டே, நதீம், தீபக் சாஹர், வருண் ஆரோன், உனத்கத்

இந்தியா (சி)

அஜின்கயே ரஹானே(கேப்டன்), அபினவ் முகுந்த், சுப்மான் கில், ரவிக்குமார் சம்ரத், சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், பப்பு ராய், நவ்தீப் சைனி, ரஜ்நீஷ் குர்பானி, உமர் நசீர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals

New Shape Tailors


Thoothukudi Business Directory