» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு!!

திங்கள் 15, அக்டோபர் 2018 12:26:36 PM (IST)மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் உள்நாட்டில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.  

இந்நிலையில் கேப்டன் விராட் கோலி, 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய உமேஷ் யாதவ் பிரித்வி ஷா-வின் திறமையையும் பாராட்டியுள்ளார். விராட் கோலி கூறியதாவது: ஷர்துல் தாக்கூர் காயத்தில் வெளியேறிய பிறகே இரு இன்னிங்ஸ்களிலும் உமேஷ் சிறப்பாக பந்துவீசியது மிகப்பெரிய விஷயம். மணிக்கு 140 கிமீ வேகத்தில் அயராது வீசுகிறார். உமேஷ் யாதவ் ஒரு திறமை வாய்ந்த பவுலர் என்பதை பலரும் உணர்ந்ததில்லை. விளையாட முடியாத பந்துகளை அவர் அடிக்கடி வீசுகிறார், வலைப்பயிற்சியில் நாங்கள் இதனை தினசரி எதிர்கொண்டு வருகிறோம். அதாவது அவர் ஒரு பந்தை வீசுவார் அதில் நாம் அவுட் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் நன்றாக வீசுவதாக அவர் தன்னை புரிந்து வைத்துள்ளார்.

பிரித்வி ஷா தனிச்சிறப்பான ஒரு வீரர். பிரித்வி ஷா போன்று நாம் விரும்பும் ஒரு தொடக்கத்தை கொடுக்கும் வீரரைத்தான் எதிர்பார்த்தோம். அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடும் அவர் அலட்சியமாக ஆடுவதில்லை. தன் ஆட்டத்தின் மீது அவருக்கு ஏகப்பட்ட நம்பிக்கை உள்ளது. புதிய பந்தை எதிர்கொள்வதில் பிரித்வி ஷாவுக்கு ஒரு மிகப்பெரிய திறன் உள்ளது. நாங்கள் 18.19 வயதில் ஆடும்போது கூட பிரித்வி ஷாவின் திறமையில் 10% கூட எங்களிடம் இருந்ததில்லை. அவர் இங்கிருந்து கட்டமைக்க வேண்டும், டெஸ்ட் கிரிக்கெட்டில் வந்து உடனடியாக அச்சமற்று ஆடி ஆதிக்கம் செலுத்தும் வீரர் கிடைத்திருக்கிறார் இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது. இவ்வாறு கூறினார் விராட் கோலி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDNew Shape Tailors

Joseph Marketing


crescentopticals

Thoothukudi Business Directory