» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா

ஞாயிறு 14, அக்டோபர் 2018 9:35:45 PM (IST)மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்றது. 

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 75 ரன்களிலும், பந்த் 85 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், இருவரும் 3-ஆம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கினர். இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன் இந்திய அணி 106.4 ஓவர்கள் முடிவில் 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதன்மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக பந்த் 92 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை இழந்து அசத்தினார். இதைத்தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால், அந்த அணி 46.1 ஓவர்கள் முடிவில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் அம்பிரிஸ் 38 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 2-ஆவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தப் போட்டியில் மட்டும் உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 56 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் 72 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிதான இலக்கை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா மற்றும் ராகுல் துரிதமாக ரன் குவித்து 16.1 ஓவர்கள் முடிவில் எட்டினர். இதன்மூலம், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிருத்வி மற்றும் ராகுல் தலா 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய உமேஷ் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டியில் சதம் மற்றும் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் என பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்திய அறிமுக இளம் வீரர் பிருத்வி ஷா தொடர் நாயகன் விருதை வென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape TailorsBlack Forest Cakes


CSC Computer Education

Anbu Communications


Nalam PasumaiyagamThoothukudi Business Directory