» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஏழு மாத கர்ப்பத்துடன் டென்னிஸ் விளையாடும் சானியாமிர்சா

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 6:59:28 PM (IST)

விரைவில் தான் தாயாகவுள்ளதாக இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். 

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை சானியா மிர்சா. இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2016), விம்பிள்டன் (2015), யூ.எஸ்., ஓபன் (2015) சாம்பியன் பட்டமும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2009), பிரஞ்சு ஓபன் (2012), யூ.எஸ்., ஓபன் (2014) சாம்பியன் பட்டமும், வென்றுள்ளார். 

கடந்த 2010 ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்து கொண்ட போதும், தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார். இவர் விரைவில் தாயாகவுள்ளதாக சமீபத்தில் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ள சானியா, டென்னிஸ் விளையாடியுள்ளார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Nalam Pasumaiyagam

Anbu Communications




Joseph Marketing

Black Forest Cakes

New Shape Tailors



Thoothukudi Business Directory