» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விராட்கோலிக்கு சச்சின்டெண்டுல்கர் முக்கிய அறிவுரை

புதன் 8, ஆகஸ்ட் 2018 7:37:46 PM (IST)

மேலும் மேலும் அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என இந்தியஅணி கேப்டன் விராட் கோலிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியின் சாதனைகள் குறித்தும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் கூறும் போது,விராட் கோலி, இதேபோல சிறப்பாக விளையாடவேண்டும். அவர் அருமையாக விளையாடி வருகிறார். உங்கள் இலக்கு மீது கவனம் இருக்கவேண்டும். உங்கள் மனது உங்களை வழிநடத்தவேண்டும். உங்களுக்கு என்ன தேவை என்பதில் ஆர்வத்துடன் செயல்பட்டால் அதற்குரிய முடிவுகள் உண்டாகும். 

என் அனுபவத்தில் சொல்கிறேன். எத்தனை ரன்கள் அடித்தாலும் அது போதாது என்றே தோன்றும். விராட் கோலி எத்தனை ரன்கள் எடுத்தாலும் இன்னும் நிறைய எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் உருவாகும். பந்துவீச்சாளர்களால் பத்து விக்கெட்டுகள்தான் எடுக்கமுடியும். ஆனால் பேட்ஸ்மேன்களால் ரன்கள் எடுத்துக்கொண்டே இருக்கமுடியும். எனவே மகிழ்ச்சி அடையலாம். ஆனால் முழுத்திருப்தி ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

Sarath chanalkarai alancholai (p o)Aug 9, 2018 - 07:23:24 AM | Posted IP 157.5*****

I am your fan👍👍👍

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors



crescentopticals



Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory