» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அஸ்வின், இஷாந்த் பந்துவீச்சில் சுருண்டது இங்கிலாந்து : இந்திய அணியின் வெற்றிக்கு 84 ரன்கள் தேவை

சனி 4, ஆகஸ்ட் 2018 10:52:14 AM (IST)



இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு  வெற்றிபெற 84 ரன்கள் தேவைப்படும் நிலையில் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 80 ரன்னும், விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ 70 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது ‌ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி, கேப்டன் விராட்கோலியின் (149 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டு 274 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜென்னிங்ஸ், கேப்டன் ஜோரூட் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 53 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் ‌ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சரிவர சோபிக்காத நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் தேவை. விராத் கோலி 43(76) ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18(44) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் இரண்டு விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் குரான் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர். ஆட்டம் நிறைவு பெற இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ளது. இந்திய அணியின் கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளது. இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Joseph Marketing

New Shape Tailors



Anbu Communications

CSC Computer Education




Thoothukudi Business Directory