» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அஸ்வினை தமிழில் உற்சாகப்படுத்திய தினேஷ் கார்த்திக்

வியாழன் 2, ஆகஸ்ட் 2018 4:27:15 PM (IST)



பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி  285 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் ரவிசந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 25 ஓவருக்கு 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்து அணியின் விக்கெட் சரிய முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் அஸ்வின் பந்து வீசும்போது,  கீப்பிங் செய்துக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் அஸ்வினின் பந்து வீச்சை ஊக்குவிக்கும் வகையிலும், இங்கிலாந்து வீர்ரகளில் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் தமிழில் உரையாடிக் கொண்டிருந்தார். அந்த வீடியோவில் தினேஷ் கார்த்திக் அஸ்வினிடம், "டேய்..டேய்..டேய்.. வேற மாதிரி டா நீ...போடுறா மாமா.. நல்லாருக்கு அஷ்வின்.. போடு மாமா.. போடு மாமா.. அடுத்த மூணு பாலையும்.. அப்படியே போடு.. என்ன பண்ணுறான்னு பாக்கலாம் அஷ்வின்..” ரொம்ப கிட்ட வேண்டாம், இவனுக்கெல்லாம் சாதரணமா பால் போடு, ஒரு ரன் போன பரவாயில்ல...கால்ல பட்டா காலி.. பொறுமையா பால் போடு அஷ்...”என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Joseph Marketing



crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory