» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து அரையிறுதி: பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்!!

புதன் 11, ஜூலை 2018 11:08:21 AM (IST)



உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.

ஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகித்தன. இரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD




crescentopticals


New Shape Tailors



Thoothukudi Business Directory