» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்திடம் தோல்வி ஏன்? கேப்டன் விராட் விளக்கம்

சனி 7, ஜூலை 2018 5:08:49 PM (IST)இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் கோலி விளக்கம் அளித்துள்ளார். 

முதல் டி20 ஆட்டத்தில் வென்ற இந்திய அணி இந்தமுறை முதலில் பேட்டிங் செய்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் தேர்வு அது.  ரோஹித் சர்மா 5 ரன்கள், தவன் 10 ரன்கள், ராகுல் 6 ரன்கள்... இப்படிக் கடகடவென முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. இதனால் கடைசிவரை தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தியது இந்தியா. ரெய்னா மட்டும் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். கோலியும் தோனியும் கடைசிக்கட்ட ஓவர்களில்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 

கோலி 38 பந்துகளில் 47 ரன்களும் தோனி 24 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தார்கள். பாண்டியா 12 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் அற்புதமான பந்துவீச்சால் இந்திய அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. வில்லியும் பிளங்கெட்டும் பிரமாதமாகப் பந்துவீசி 4 ஓவர்களில் முறையே 18, 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார்கள். இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகள் எடுத்துவந்தாலும் இங்கிலாந்து அணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.

இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வென்றது. ஹேல்ஸ் 41 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தபிறகு மீண்டு வருவது கடினமானது. சரியான விதத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதால் நாங்கள் மோசமான ஷாட்களை விளையாட வேண்டியிருந்தது. இன்னும் கூடுதலாக 10-15 ரன்கள் எடுத்திருக்கலாம். 149 ரன்கள் என்பது அவ்வளவு எளிதல்ல என்று எண்ணியிருந்தோம். அவர்கள் சிறப்பாக விளையாடி வென்றுவிட்டார்கள்.

இன்று அவர்கள் குல்தீப் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார்கள். நடு ஓவர்களில் இந்தமுறை அதுதான் வித்தியாசம். குல்தீப்பை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நன்குப் பயிற்சிகள் எடுத்து அதை நல்லமுறையில் செயல்படுத்தியுள்ளார்கள். எங்களுக்கு நல்ல ஆட்டம் அமைந்தாலும் இங்கிலாந்து அணி எங்களைவிட சிறப்பாக விளையாடியுள்ளது என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Nalam Pasumaiyagam


Anbu Communications

CSC Computer Education

New Shape Tailors

Black Forest Cakes

Thoothukudi Business Directory