» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தோனியின் 37வது பிறந்தநாள் : பிரபலங்கள் ரசிகர்ள் வாழ்த்து
சனி 7, ஜூலை 2018 3:52:04 PM (IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகி தற்போது அணியில் சாதாரண வீரராக ஆடிவருகிறார். இந்திய அணியின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார் தோனி. தன் மீதான விமர்சனங்கள் எழும்போதெல்லாம், தனது திறமையின் மூலம் பதிலடி கொடுத்து 14 ஆண்டுகளாக தனக்கான இடத்தை தக்கவைத்து தன்னை அணியின் முக்கியமான வீரராக நிலைநிறுத்தி கொண்டிருக்கிறார்.
இன்று தோனியின் 37 வது பிறந்த நாள். தனது மனைவி, குழந்தை மற்றும் சக வீரர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை தோனி கொண்டாடியுள்ளார். தோனியின் பிறந்த நாள் கொண்டாட்டம் இங்கிலாந்தில் தான். இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டி தோனிக்கு மிகவும் ஸ்பெஷல். காரணம், இது தோனிக்கு 500-வது சர்வதேசப் போட்டியாகும். அவரது பிறந்த நாளுக்கு கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிக்பாஷ் டி-20 கிரிக்கெட்: ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் அணி சாம்பியன்
திங்கள் 18, பிப்ரவரி 2019 12:24:48 PM (IST)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை த்ரில் வெற்றி: குசல் பெரேராவுக்கு குவியும் பாராட்டு!!
திங்கள் 18, பிப்ரவரி 2019 8:20:25 AM (IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்.. இந்திய அணி அறிவிப்பு: தினேஷ் கார்த்திக் நீக்கம்
சனி 16, பிப்ரவரி 2019 11:43:46 AM (IST)

ஜோய் ரூட்டை தகாத வார்த்தைகளால் திட்டிய கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் தடை: ஐசிசி அதிரடி
வியாழன் 14, பிப்ரவரி 2019 3:46:38 PM (IST)

ரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும்: ஷேன் வார்னே யோசனை
வியாழன் 14, பிப்ரவரி 2019 12:50:55 PM (IST)

இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்போம்: பாக் முன்னாள் கேப்டன் மொயின் கான் சவால்!!
புதன் 13, பிப்ரவரி 2019 3:27:24 PM (IST)
