» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்வதேச டி-20 போட்டிகளில் விரைவாக 2ஆயிரம் ரன்கள்: விராட் கோலி சாதனை

புதன் 4, ஜூலை 2018 4:40:54 PM (IST)

சர்வதேச  டி-20 போட்டிகளில் விரைவாக 2ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் துவக்கத்தில், இந்திய அணி 3- டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக,  இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 

டி-20 போட்டிகளில்  இரண்டாயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் விராட் கோலி ஆவார். அதேவேளையில், விரைவாக 2000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலி, 56 போட்டிகளில்  இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக  மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals


New Shape Tailors



Thoothukudi Business Directory