» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிராக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் : விராட் கோலி

திங்கள் 2, ஜூலை 2018 8:33:00 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் முழுவதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளோம். இதில் எங்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துடன் 3 டி 20, 3 ஒரு நாள், 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர் களில் மோதுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:டி20 போட்டிகளில் எங்களுக்கு போதுமான அனுபவம் உள்ளது. எனவே நாங்கள் அனைவருமே இந்த தொடருக்கு தயாராக உள்ளோம். ஒரு சிறந்த அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகச் சிறப்பானது. இந்த தொடர் முழுவதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளோம். இதில் எங்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால், கற்றுக்கொள்ள நிறை உள்ளது. அப்போது தான் ஒரு அணியாக முன்னேற முடியும். அடுத்து இங்கு உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால், இப்போதே அதற்கு தயாராக இந்த தொடரை சிறந்த களமாக பயன்படுத்த விரும்புகிறோம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing



New Shape Tailors




Thoothukudi Business Directory