» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசியகோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை பந்தாடிய இந்திய மகளிர்அணி

சனி 9, ஜூன் 2018 1:21:01 PM (IST)

மகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை இந்திய மகளிர்அணி எளிதில் வீழ்த்தியது.

மகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது. கோலாலம்பூரில் நடை பெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 72 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வெற்றி இலக்கை 16 புள்ளி 1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. இதன் மூலம் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. சமீப காலமாக இந்திய ஆண்கள் அணி க்கு ஈடாக இந்தியமகளிர் கிரிக்கெட் அணியும் வெற்றிகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing



New Shape Tailors



crescentopticals



Thoothukudi Business Directory