» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சி.எஸ்.கே. அணியால் ஒருபோதும் காவிரி நீரைக் கொண்டு வர முடியாது: தோனி பேச்சு!!

சனி 9, ஜூன் 2018 11:48:04 AM (IST)

சிஎஸ்கே-யால் ஒருபோதும் காவிரி நீரைக் கொண்டு வர முடியாது என சென்னையில் நடைபெற்ற வெற்றி விழாவில் கேப்டன் தோனி பேசியுள்ளார். 

2018 ஐபிஎல் டி20 சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கள் சாம்பியன்ஷிப் வெற்றியை சென்னையில் கொண்டாடினர். அதில் தோனி மிகவும் உற்சாகமாகப் பல விஷயங்களைப் பற்றி பேசினார். அப்போது "அடுத்த ஆண்டு சென்னையில் வென்ற கோப்பையை மீண்டும் தக்கவைப்போம் என்று நம்புகிறேன். விஷயம் என்னவெனில் சிஎஸ்கேவினால் ஒரு போதும் காவிரியை இங்கு கொண்டு வர முடியாது. ஆம் வழியேயில்லை.
 
ஆனாலும் நாங்கள் குறிவைக்கப்பட்டோம், நியாயமானதுதான், இப்படி எப்போதும் நடக்கக் கூடியதுதான். ஆனால் நாங்கள் ஐபிஎல் போட்டிகளில் வெல்ல முடிந்தது, அதைச் செய்ததற்காக மகிழ்ச்சியடைகிறோம். அதனால்தான் கோப்பையை மீண்டும் சென்னைக்கே கொண்டு வந்து விட்டோம். அடுத்த ஆண்டும் ஐபிஎல்-ல் கோப்பைக்காக அணிகள் மோதும், நாங்கள் அவர்களுக்குத் தயாராக இருக்கிறோம். எது சிறந்த அணியோ அது வெல்லும்” என்று தன் நீண்ட உரையில் தெரிவித்திருந்தார்.

காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டிகள் சென்னையிலிருந்து புனேவுக்கு மாற்றப்பட்டன. இதனால் கடும் சர்ச்சைகள் எழுந்தன, ஐபிஎல் போட்டிகளை இங்கிருந்து அகற்றிவிட்டால் காவிரி நீர் கிடைக்குமா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. ஐபிஎல் போட்டிகள் முக்கியமா, காவிரி பிரச்சினை முக்கியமா என்ற விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் தோனி வெற்றி விழாவில் நாங்கள் குறிவைக்கப்பட்டோம், எங்களால் ஒரு போதும் காவிரியைக் கொண்டு வர முடியாது கோப்பையைத்தான் கொண்டு வர முடியும் என்று சமத்கார தொனியில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticals



Thoothukudi Business Directory