» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனியை பார்க்க மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்

ஞாயிறு 6, மே 2018 9:57:32 PM (IST)

ஐபிஎல் போட்டியின்போது திடீரென மைதானத்திற்குள் நுழைந்த  ரசிகர் ஒருவர், தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஐபிஎல் 2018-ன் 35வது போட்டியில் ஆர்சிபி அணியை முதலில் பேட் செய்ய அழைத்த தோனி அருமையான பந்து வீச்சு மாற்றங்களைச் செய்து அந்த அணியை 127 ரன்களுக்கு மட்டுபடுத்தி பிறகு 18 ஓவர்களில் 128/4 என்று தொழில் நேர்த்தியுடன் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. புனே நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு, சென்னை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பார்திவ் பட்டேல் 53, டிம் சவுத்தி 36 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, நிதானமாக விளையாடியது. இறுதிய் 18 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்த சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டி நேற்று முடிந்தவுடன், திடீரென ரசிகர் ஒருவர் தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்தார். அத்துமீறி அவர் நுழைந்ததால் போலீஸாரும், மற்றவர்களும் பதற்றம் அடைந்தனர். அவரை காவலர்கள் விரட்டிச் சென்றனர். அந்த நபர் நேராக டோனியிடம் ஓடி வந்து, அவரது காலில் விழுந்தார். தான் தோனியின் தீவிர ரசிகன் என்றும், அவரிடம் ஆசி வாங்குவதற்காகவே மைதானத்திற்குள் நுழைந்ததாகவும் அவர் கூறினார். இந்த காட்சியை பார்த்து அரங்கமே அதிர்ந்தது. ரசிகர்கள் கைதட்டலுடன் ஆரவாரம் செய்ததனர். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Anbu CommunicationsBlack Forest Cakes


New Shape Tailors


CSC Computer Education

Nalam PasumaiyagamThoothukudi Business Directory