» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பவுலிங்கில் அசத்திய ஜடேஜா : பெங்களூருவிற்கு எதிராக சென்னை அணி மீண்டும் வெற்றி

சனி 5, மே 2018 7:24:13 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூருவிற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை - பெங்களூரு அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 35வது லீக் போட்டி புனேவில் நடைப்பெறுகிறது.இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய பெங்களூர் அணி தொடர்ந்து கோலி மற்றும் டிவில்லியர்ஸ் விக்கெட்டுகளை விரைவில் இழந்து தத்த ளித்தது . தொடக்க வீரர் பார்த்தில் படேல் மட்டும் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். 

தொடர்ந்து பல போட்டிகளாக சொதப்பி வந்த சென்னை வீரர் ஜடேஜா இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய சிஎஸ்கே அணியில் அம்பதிராயுடு 32 ரன்களும், கேப்டன் தோனி 31 ரன்களும் எடுக்க முடிவில் 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து 6 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து

அஸ்வின்மே 7, 2018 - 05:22:11 PM | Posted IP 162.1*****

இது மற்ற அணிகளுக்கு நல்ல விசியம் ,ஏனென்றால் இவன் நன்கு விளையாடியதால் இவன் மீண்டும் அணியில் இடம் பெற்று மறுபடியும் சொதப்புவான் ....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNew Shape Tailors


CSC Computer Education

Black Forest Cakes

Joseph Marketing


Anbu Communications

Nalam PasumaiyagamThoothukudi Business Directory