» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை!

சனி 5, மே 2018 5:35:13 PM (IST)

சிஎஸ்கே அணியில் எடுத்துள்ள முக்கிய முடிவுகள் குறித்து, கேப்டன் தோனிக்கு சுனில் கவாஸ்கர் சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 33-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. இப்போட்டியில் கேப்டன் தோனி எடுத்த சில முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ள சுனில் கவாஸ்கர், தோனியின் முக்கிய முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது: டுபிளெஸ்ஸிஸைத் தொடக்க வீரராக அனுப்பும் உத்தியை தோனி மறுபரீசலனை செய்யவேண்டும். இதனால் ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ள அம்பட்டி ராயுடுவால் அதிக பந்துகளை எதிர்கொள்ளமுடியாமல் போய்விடுகிறது. நடுவரிசையில் களமிறங்குவதால் உடனடியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ராயுடு. 

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிராவோவை தோனி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது கடினம். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் நல்ல ஃபார்மில் உள்ளார் பிராவோ. அதேசமயம் ஜடேஜா ஓரளவு தடுமாறி வருகிறார். இரண்டு கேட்சுகளை நழுவவிட்டதில் அதைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

New Shape TailorsFriends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals

Joseph Marketing
Thoothukudi Business Directory