» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பஞ்சாபை பந்தாடிய மும்பை : ஒரே நாளில் மூன்று இடங்கள் முன்னேறியது

சனி 5, மே 2018 11:37:23 AM (IST)பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி, புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்திற்கு முன்னேறியது.

மும்பை இண்டியன்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகள் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் 34-வது ஆட்டம் நேற்று இரவு இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி 174 ரன்களை எடுத்தது. கிறிஸ் கெயில், ராகுல் சிறப்பான துவக்கம் அளித்தும், அந்த அணியால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. மும்பை தரப்பில் மெக்ளேனகன், பும்ரா, பாண்டியா, மார்கண்டே, கட்டிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை, ரோஹித்-க்ருணால் பாண்டியா இணை பஞ்சாப் அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு துரிதமாக ரன்களை சேர்த்தது. ரோஹித் 24 ரன்களுடனும், க்ருணால் பாண்டியா 31 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 176 ரன்களை எடுத்து ஒரு ஓவர் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் முஜிப்பூர் ரஹ்மான் 2 விக்கெட்டையும், ஸ்டாய்னிஸ், டை தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த ஒரு வெற்றியால் நேற்று கடைசி இடத்தில் இருந்த மும்பை, 5-ம் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மும்பை, பெங்களூர், தில்லி, ராஜஸ்தான் என நான்கு அணிகளும் 6 புள்ளிகளைக் கொண்டிருந்தாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் மும்பை 5-ம் இடத்தில் உள்ளது. பிளேஆஃப் கடினம் என்று சொல்லப்பட்ட அணிகளில் முக்கியமானது மும்பை இந்தியன்ஸ். ஆனால் சமீபத்திய வெற்றிகளின் மூலம் அந்த அணி 3 வெற்றிகளுடன் 5-ம் இடத்தைப் பிடித்திருப்பதால் இதர அணிகளுக்குக் கலக்கம் ஏற்பட்டுள்ளன. மும்பையின் வெற்றிகள் இதர அணிகளின் பிளேஆஃப் வாய்ப்பைத் தடுப்பதாக உள்ளது. இதனால் ஐபிஎல் லீக் ஆட்டங்களின் கடைசிக்கட்டம் மேலும் சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


crescentopticals

Joseph MarketingThoothukudi Business Directory