» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கில், தினேஷ் கார்த்திக் அதிரடியில் கொல்கத்தா வெற்றி: இரண்டாம் இடத்துக்கு இறங்கியது சென்னை அணி!!

வெள்ளி 4, மே 2018 10:48:09 AM (IST)



ஐபிஎல் தொடரில் 33-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமாக வென்றது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 17.4 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து வென்றது. தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தும் ஷுப்மன் கில் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கொல்கத்தா வீரர் சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இத்துடன் 9 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்த இரு அணிகளில், கொல்கத்தாவுக்கு இது 5-வது வெற்றி. சென்னைக்கு இது 3-வது தோல்வி ஆகும்.

சென்னை அணியினர் நேற்றும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். இதனால் சென்னை அணி ரன்கள் குவிக்கத் தடுமாறினாலும் கொல்கத்தா அணி மிக எளிதாகப் பந்துவீச்சை எதிர்கொண்டு 17.4 ஓவர்களிலேயே வெற்றியை அடைந்தார்கள். இந்த ஐபிஎல் போட்டியில், மோசமான பந்துவீச்சு சிஎஸ்கே அணிக்குப் பெரிய தலைவலியாக உள்ளது. அதற்குத் தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என்பது சிஎஸ்கே ரசிகர்களை மிகவும் வேதனைக்கு ஆளாக்குகிறது. நேற்றைய தோல்வியினால் சென்னை அணி இரண்டாம் இடத்துக்கு இறங்கியது. ஹைதராபாத் அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals


New Shape Tailors

Joseph Marketing



Thoothukudi Business Directory