» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அதிரடி : ராஜஸ்தானை வென்றது டெல்லி டேர்டெவில்ஸ் அணி!!

வியாழன் 3, மே 2018 11:13:38 AM (IST)ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ், பிரித்வி ஷா ஆகியோரின் அதிரடி பேட்டிங்கால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 4 ரன்களில் வென்றது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டத்தால், போட்டி 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 17.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன் பின் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆட்டம் 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு, இலக்கு 151 ரன்களாக ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 9 போட்டிகளில் விளையாடி 6 தோல்விகள், 3 வெற்றிகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 தோல்விகள், 3 வெற்றிகள் என 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி தன்னை ப்ளே ஆப் சுற்றுக்கு மெல்ல தயார்படுத்தி, விராட் கோலி அணிக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுத்து வருகிறது. அதிரடியாக அரைசதம் அடித்த ரிஷப் பந்த் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டு, ஆரஞ்சு தொப்பியும் வழங்கப்பட்டது. டிரன்ட் போல்ட்டுக்கு நீலநிறத் தொப்பி வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

New Shape Tailors

Anbu Communications


Joseph Marketing


CSC Computer Education

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory