» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் : ராகுல்,கெயில் அதிரடி ஆட்டம், கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்

சனி 21, ஏப்ரல் 2018 8:36:20 PM (IST)



ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற பேட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

10 வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறு கிறது.இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தாஅணியில் கிறிஸ் லின் 74 (41) ரன்களும்,கேப்டன் தினேஷ் கார்த்திக் 43 ரன்களும் அடித்தனர்.20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 191 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து சேஸ் செய்த பஞ்சாப் அணி வீரர்கள் ராகுல் மற்றும் கெயில் ஆகியோர் கொல்கத்தா பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.ஆனால் 9 வது ஓவரில் மழை வந்ததால் ஆட்டம் பாதியில் நின்றது.தொடர்ந்து 13 ஓவர்க ளாகவும் இலக்கு 125 ஆகவும் ஆட்டம் குறைக்கப்பட்டது.முடிவில் 11.1 ஓவரில் 126 ரன்கள் எடுத்து பஞ்சாப் வெற்றி பெற்றது.இதில் ராகுல் 60 (27 பந்துகள்) ரன்களுக்கு ஆட்டமிழக்க கெயில் 62 (38 பந்துகள்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Joseph Marketing


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD








Thoothukudi Business Directory