» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராஜஸ்தான் சொதப்பல் : கொல்கத்தா அணி 3வது வெற்றி

வியாழன் 19, ஏப்ரல் 2018 10:55:35 AM (IST)ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாய்த்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் இடையே ஆன ஐபிஎல் 15-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ரஹானே, ஆர்சி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில் 7-வது ஓவர் முடிவில் ரஹானே 36 ரன்களில் தினேஷ் கார்த்திக்கால் ரன் அவுட் செய்யப்பட்டார். சஞ்சு சாம்சன் 7 ரன்களுக்கு சிவம் மவி பந்தில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் நிலையாக ஆடி வந்த ஆர்சி ஷார்ட் 44 ரன்களில் நிதிஷ் ராணா பந்துவீச்சில் போல்டானார். ராகுல் திரிபாதி 15 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் பந்துவீச்சில் ரஸ்ஸலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் பென் ஸ்டோக்ஸ் 14 , கிருஷ்ணப்பா கெளதம் 12 , தாவல் குல்கர்னி 3 ரன்களிலும் ஷ்ரேயஸ் கோபால் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஜோஸ் பட்லர் 24 ரன்களுடனும், உனதிகட் ரன் ஏதுமின்றியும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை ராஜஸ்தான் அணி குவித்திருந்தது.

கொல்கத்தா தரப்பில் டாம் கர்ரன், நிதிஷ் ராணா தலா 2 விக்கெட்டுகளையும், சிவம், குல்தீப் யாதவ், சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரேன், கிறிஸ் லீன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் 2 பந்துகளை சந்தித்த நிலையில் லீன், கெளதம் பந்துவீச்சில் போல்டானார். சுனில் நரேன் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 35 ரன்களில் ரன் அவுட்டானார். 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 48 ரன்கள் விளாசிய உத்தப்பா, கெளதம் பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா அணி 12.3 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 102 ரன்களை எடுத்திருந்தது.

பின்னர் நிதிஷ் ராணா, கேப்டன் தினேஷ் கார்த்திக் இணை பொறுப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் தினேஷ் கார்த்திக் 42 ரன்களுடனும், 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் நிதிஷ் ராணா 35 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 1.1 ஓவர் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 163 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் கெளதம் 2 விக்கெட்டுளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி, தொடரில் 3வது வெற்றியைப் பெற்று, புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


crescentopticals

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

CSC Computer EducationThoothukudi Business Directory