» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆரஞ்சு தொப்பி இப்போ அவசியமா? விராட் விரக்தி!!

புதன் 18, ஏப்ரல் 2018 5:43:56 PM (IST)

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறாக முடிய 46 ரன்களில் தோல்வி கண்ட பெங்களூரு அணி கேப்டன் தோல்வியின் விரக்தியை வெளிப்படுத்தினார்.

உமேஷ் யாதவ் முதல் 2 பந்துகளிலேயே மும்பை இந்தியன்சின் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோரை பவுல்டு செய்து அபாரத் தொடக்க கொடுத்தும் சுமாரான பந்துவீச்சு மற்றும் தவறான அணித் தேர்வால் கோலி அணி நேற்று தோல்வியைத் தழுவியது.  

"இந்தத் தோல்வி நிலையில் இந்த ஆரஞ்சுத் தொப்பியை நான் அணிய விரும்பவில்லை. நாங்கள் தூக்கித்தான் எறிந்தோம், எங்கள் விக்கெட்டுகளை நாங்கள் பறிகொடுத்த விதங்களை மீண்டும் ஒரு முறை மனதில் அசைப்போட்டு பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

ஓரிரண்டு நல்ல கூட்டணிகள் எங்களுக்கு வெற்றி தேடித் தந்திருக்கும். மும்பை நன்றாகப் பந்து வீசினர், நன்றாக விளையாடினர். அவர்கள் அச்சமற்ற கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் இயன்ற வரை போராடினோம் ஆனால் அவர்கள் விக்கெட்டுகளை தேவைப்படும் போது வீழ்த்த முடியவில்லை.”இவ்வாறு கூறினார் விராட் கோலி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals





Friends Track CALL TAXI & CAB (P) LTD







Thoothukudi Business Directory