» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சஞ்சு சாம்சன் அதிரடி பெங்களூருவை வென்றது ராஜஸ்தான்

திங்கள் 16, ஏப்ரல் 2018 11:05:47 AM (IST)சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

இரு அணிகளுக்கு இடையே ஆன ஐபிஎல் 11-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி சார்பில் ரஹானே, ஆர்சி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரஹானே 36 ரன்களிலும், ஆர்சி ஷார்ட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 92 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பென்ஸ்டோக்ஸ் 27, ஜோஸ் பட்லர் 23, ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ராகுல் திரிபாதி 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20-வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி மொத்தம் 217 ரன்களைக் குவித்தது. பெங்களூரு அணி தரப்பில் கிறிஸ்ட் வோக்ஸ், சகால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பெங்களூரு அணியின் மெக்கல்லம், டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

எனினும் அந்த அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. மெக்கல்லம் வெறும் 4 ரன்களுக்கு கெளதம் பந்தில் ஆட்டமிழந்தார். டி காக் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். 57 ரன்களை குவித்து கோலி ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய டி வில்லியர்ஸ் 20, பவன் நேகி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சுந்தர் 35 ரன்களை போல்டானார். மந்தீப் சிங் 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.20-வது ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி 198 ரன்களை மட்டுமே குவித்து தோல்வியைத் தழுவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Joseph Marketing

New Shape TailorsFriends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticalsThoothukudi Business Directory