» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கிரிக்கெட்டில் தலைசிறந்த ஒருநாள் வீரர் இவர் தான் : சொல்கிறார் கிளார்க்

சனி 10, பிப்ரவரி 2018 7:22:57 PM (IST)

விராட்கோலியை தலைசிறந்த ஒருநாள் வீரர் என ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல்கிளார்க் பாராட்டியுள்ளார்.

தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் இந்திய அணியின் கேப்டன்கோலி அனைத்து விதமான போட்டியிலும் ஜொலித்து வருகிறார். தென்ஆ ப்பிரிக்காவிற்கு எதிரான தொடரிலும் கோலி 2 சதங்கள் அடித்துள்ளார். குறிப்பாக 3-ஆவது போட்டியில் சதமடி த்ததுடன் பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளார் விராட் கோலி. 

அதில், தென் ஆப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர், இந்திய கேப்டன்களில் அதிக சதமடித்தவர், தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர், ஒரு இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு மேல் குவித்த 2-ஆவது கேப்டன் உள்ளிட்ட பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
 
இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் உலகில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஒருநாள் போட்டியின் தலைசிறந்த வீரர் விராட் கோலி. இவருக்கு எதிராக பந்துவீசுவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. தலைசிறந்த திறமைசாலி என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors

Johnson's Engineers




crescentopticals



Thoothukudi Business Directory