» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விராட் கோலியின் ஆக்ரோஷம் என்னை கவர்ந்துள்ளது: ஷாகித் அப்ரிடி

சனி 10, பிப்ரவரி 2018 2:19:17 PM (IST)

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷ அணுகுமுறை என்னை வெகுவாக கவர்ந்துள்ளது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

சுவிட்சார்லாந்தில் நடைபெற்று வரும் ஐஸ் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வரும் அப்ரிடி, போட்டிக்கு இடையே அளித்த பேட்டியில் கூறியதாவது:- " தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விராட் கோலி உள்ளார். களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் விராட் கோலியின் அணுகுமுறை என்னை வெகுவாக கவர்ந்துள்ளது.  எனது தொண்டு நிறுவனத்துக்காக பேட்,ஜெர்சி ஆகியவற்றை விராட் கோலி தொடர்ந்து வழங்கி வருகிறார்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி செயல்பாடு அபாரமாக உள்ளது. கடந்த காலங்களில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் தடுமாறுவதைதான் பார்த்து இருக்கிறோம். ஆனால், தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தி வருகிறது” என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD




crescentopticals








Thoothukudi Business Directory