» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பிங்க் சீருடையில் தென் ஆப்பிரிக்கா தோற்றதில்லை: வரலாற்றை மாற்றுமா இந்திய அணி?

சனி 10, பிப்ரவரி 2018 11:58:41 AM (IST)அதிரடி வீரர்  ஏ.பி.டிவில்லியர்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியயுள்ள பலத்துடன் ராசியான பிங்க் சீருடையில் இன்று இந்தியாவை சந்திக்கிறது தென் ஆப்பிரிக்க அணி.

ஜோஹான்னஸ்பர்க், வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக  இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் 4-வது ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. 4-0 என்று தொடரை வென்று தென் ஆப்பிரிக்க மண்ணில் சாதனை படைக்கும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. மேலும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்க் சீருடையில் இறங்கும் தென் ஆப்பிரிக்கா இந்தச் சீருடையில் இதுவரை ஆடிய 5 போட்டிகளிலும் தோற்றதில்லை.

அணிக்கு மீண்டும் திரும்பிய ஏ.பி.டிவில்லியர்ஸ் இந்த மைதானத்தில் 11 போட்டிகளில் 100.85 என்ற சராசரி வைத்துள்ளார். பிங்க் சீருடையில் இம்மைதானத்தில் 2 சதங்களை அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை அதிவேக சத சாதனையையும் இதே மைதானத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்துள்ளார் ஏ.பி.டிவில்லியர்ஸ், எனவே இத்தகைய எதிர்பார்ப்புகளின் சுமையில் டிவில்லியர்ஸ் களமிறங்குவதைப் பயன்படுத்தி விராட் கோலி நிச்சயம் நெருக்கடி கொடுத்து விரைவில் வீழ்த்த முயற்சி செய்வார் என்பது திண்ணம்.

இந்திய அணியில் பலவீனம் இல்லாமலில்லை. விராட் கோலி தன் தனிப்பட்ட பேட்டிங்கினால் இந்திய அணியின் பேட்டிங் பலவீனத்தை திறம்பட மறைத்து வைத்திருக்கிறார். ரோஹித் சர்மா 3 போட்டிகளிலும் 20 ரன்களை தாண்டவில்லை. ஷிகர் தவண் டச்சிற்கு வந்துள்ளார். கேதார் ஜாதவ், தோனி, பாண்டியா ஆகியோர் சூழ்நிலை வரும் போது நிரூபிக்க வேண்டி வரும்.

மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு அச்சுறுத்தல் சாஹல், குல்தீப் யாதவ்தான். இவர்களை அடித்து ஆட ஒரு வீர்ரை நேர்ந்து விட்டு விட வேண்டியதுதான், அவர் இவர்களை மட்டும் ஒரு கை பார்க்க வேண்டும். அதுதான் தற்காலிக வழியாக இருக்க முடியும். இந்த வாண்டரர்ஸ் பிட்ச் ரன்கள் அதிகம் அடிக்கக் கூடிய பிட்சாகவே இருக்கும். மாலை நேரத்தில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனாலும் ஆட்டத்தை பெரிய அளவில் பாதிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றி விட்டால் கடைசி 2 போட்டிகளுக்கு ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க இடமுண்டு, வெற்றி எளிதில் கிடைக்கிறது என்பதால் நாளையும் இந்திய அணியில் மாற்றமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் வருகிறார், பர்ஹான் பெஹார்டீன் வர வாய்ப்புள்ளது, மோர்னி மோர்கெல் நிச்சயம் திரும்புகிறார். நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsCSC Computer Education

Anbu Communications


Nalam Pasumaiyagam

New Shape Tailors

Black Forest Cakes

Joseph MarketingThoothukudi Business Directory