» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

19 வயதிக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை வென்று இந்தியா அபாரம்

சனி 3, பிப்ரவரி 2018 1:58:41 PM (IST)



19 வயதிக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை 4-வது முறை யாக வென்று இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்தது.

நியூசிலாந்தில் 19 வயதிக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன.இதில் இன்று இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையே இறுதிப்போட்டி நடந்தது..இதில் முதலில் பேட் செய்த ஆஸி அணி 50ஓவர்கள் முடிவில் 216 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து 217 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆட தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் மஞ்சோத் சதம் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.முடிவில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் கோப்பையை இந்தியா  வென்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors


Johnson's Engineers




crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory