» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியா படுதோல்வி: தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா!!

புதன் 17, ஜனவரி 2018 5:03:34 PM (IST)இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமாக தோல்வியை தழுவி தொடரை இழந்தது. 

இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 335 ரன்கள் எடுத்தது. ஏய்டன் மார்க்ராம் அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்தார். ஹாசிம் அம்லா 82 ரன்கள் எடுத்தார். அஸ்வின் 4 விக்கெட் எடுத்தார். இஷாந்த் சர்மா 3 விக்கெட் எடுத்தார். இந்திய ஓப்பனிங் இந்த முறையும் சொதப்பியது. கோஹ்லி மட்டும் சுதாரித்து ஆடி 153 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் 46 ரன்கள் எடுத்தார். மோர்னி மோர்கல் அதிகபட்சமாக 4 விக்கெட் எடுத்தார். மற்ற வீரர்கள்  சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

அதன்பின் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸ் இறங்கியது. இந்த முறை ஏ பி டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடினார். 80 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். ஆனாலும் 258 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்கா 286 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்நிலையில் எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்ப தொடங்கினார்கள். 9,4,5 என வரிசையாக சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ரோஹித் சர்மா மட்டுமே 47 ரன்கள் எடுத்தார். இந்தியா 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்று இருக்கிறது.

135 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என தென்னாப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது. ரெயின்போ தேசத்தில் இந்திய அணி ஒரு முறை கூட வண்ணமயமாக விளையாடியது இல்லை. 25 வருடத்தில் ஒருமுறை கூட இந்தியா தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் தொடரை வென்றது இல்லை என்ற வரலாறு தொடர்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Nalam Pasumaiyagam

Joseph Marketing

Anbu CommunicationsBlack Forest Cakes


CSC Computer EducationThoothukudi Business Directory