» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவின் புயல் வேக பந்துவீச்சாளர் கமலேஷ் நாகர்கோடி

செவ்வாய் 16, ஜனவரி 2018 3:54:11 PM (IST)ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும்  கமலேஷ் நாகர்கோடி இந்தியாவின் இளம் புயலாக உருவெடுத்துள்ளார்

19வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட், இந்தியாவுக்கு பல நட்சத்திரங்களை பரிசளித்துள்ளது. யுவராஜ் சிங், விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா, குல்தீப் யாதவ், ரிஷ்ப் பந்த் ஆகியோரின் வரிசையில் இந்த ஆண்டு நமக்கு அளித்துள்ள பரிசு கமலேஷ் நாகர்கோடி.

நியூஸிலாந்தில் தற்போது நடந்துவரும் ஜூனியர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில், தொடர்ச்சியாக 145 கிலோமீட்டர் வேகத்துக்கும் அதிகமாக பந்துகளை வீசி, (அதில் ஒரு பந்து 149 கிலோ மீட்டர் வேகம்), ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே தன் பக்கம் திரும்பியுள்ளார் கமலேஷ். இந்த போட்டியில் 7 ஓவர்களை வீசிய அவர், 29 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்துள்ளார். அத்துடன் இம்மாத இறுதியில் நடக்கும் ஐபிஎல் ஏலத்தில் இவரை வாங்க, அணிகள் போட்டிபோடும் என்பதும் உறுதியாகியுள்ளது.

இந்தியாவின் இளம் புயலாக உருவெடுத்துள்ளார் கமலேஷ், சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்துக்கு சென்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த கமலேஷ், 16 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆனால் இந்த தொடருக்கு பிறகு அவரது தோளில் காயம் ஏற்பட்டது. இதனால் உலகக் கோப்பை போட்டியில் கமலேஷால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட் அகாடமியில் பல மாதங்கள் பயிற்சி பெற்று பூரண உடல்நலம் பெற்று, அணிக்குள் நுழைந்துள்ளார் கமலேஷ்.

முதல் போட்டியிலேயே 3 விகெட்களை வீழ்த்தியிருப்பது அவரது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. "புதிய பந்துகளில் விக்கெட் எடுப்பதை விட பழைய பந்துகளில் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் விக்கெட் எடுப்பதையே அதிகம் விரும்புகிறேன்” என்று கூறும் கமலேஷ், தன் குருநாதர் ரத்தோருக்கு அடுத்தபடியாக அதிகம் புகழ்வது ராகுல் திராவிட்டைத்தான். "19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக உள்ள திராவிட், ஒவ்வொரு விஷயத்திலும் என்னைக் கூர்தீட்டி வருகிறார். அவர் சொற்படி கேட்டாலே போதும் மைதானத்தில் வெற்றி நிச்சயம். அவர் சொன்னபடி செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுத்தருவேன்” என்று உறுதியாக சொல்கிறார் கமலேஷ் நாகர்கோடி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamBlack Forest Cakes

CSC Computer Education

Anbu Communications


Joseph Marketing

New Shape TailorsThoothukudi Business Directory