» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

5-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி: 4-0 என ஆஷஸ் தொடரை வென்றது!

திங்கள் 8, ஜனவரி 2018 12:01:59 PM (IST)இங்கிலாந்து எதிரான 5-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரை 4-0 என்கிற கணக்கில் வென்றுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 346 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 83 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியாவின் பேட்ரிக் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 193 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட கடைசி நாளான இன்று இங்கிலாந்து 210 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அணியின் வசம் 6 விக்கெட்டுகளே இருந்தன. இந்நிலையில் இன்று 180 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது. ரூட் 58 ரன்கள் எடுத்து ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். ஆஸ்திரேலியத் தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும் லயன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். இதனால் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் 5-வது டெஸ்டை வென்று ஆஷஸ் தொடரை 4-0 என்கிற கணக்கில் வென்றுள்ளது. 5-வது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகனான கம்மின்ஸும் தொடர் நாயகனாக ஸ்டீவ் ஸ்மித்தும் தேர்வு செய்யப்பட்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors
crescentopticals
Thoothukudi Business Directory