» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணியின் பேட்டிங் சவால் அளிக்கும் : நிக் போத்தாஸ்

செவ்வாய் 26, டிசம்பர் 2017 10:21:08 PM (IST)



இந்திய அணியின் பேட்டிங்  தென் ஆப்பிரிக்காவுக்கு சவாலான ஒன்றுதான் என இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி திணறும் என்று ஒரு பகுதியினர் கணிக்க, இலங்கைப் பயிற்சியாளர் நிக் போத்தாஸ், தென் ஆப்பிரிககவுக்கும் சம அளவில் கடினம் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக இலங்கைப் பயிர்சியாளர் நிக் போத்தாஸ் கூறியதாவது: இந்திய அணியின் அனைத்து அடிப்படைகளும் சரியாக அமைந்துள்ளன. பசுந்தரை பிட்ச் கொடுத்தால் இந்திய அணி பவுலர்கள் எதிரணியினரை சுருட்டும் திறமை கொண்டவர்கள். மட்டை விக்கெட் என்றால் அதற்கும் அதன் அடிப்படைகள் சரியாகவே உள்ளது. 

ஸ்பின் பிட்சா அதற்கும் இந்திய அணி தயாராக உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இந்திய பேட்டிங் வரிசை ரன்கள் எடுத்தால், தென் ஆப்பிரிக்காவுக்கும் மிகக் கடினமாக அமைந்து விடும். அணியில் மாற்றம் செய்தாலும் அது இந்திய அணியைக் காயப்படுத்துவதில்லை. தோனி ஆட்டத்தை முடித்துக் கொடுக்கிறார், இந்தவகையில் அவர் உலகின் சிறந்த வீரர், எனவே ஒருநாள் தொடரும் தென் ஆப்பிரிக்காவுக்கு சவாலான ஒன்றுதான்.இவ்வாறு கூறினார் நிக் போத்தாஸ்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


New Shape Tailors

crescentopticals




Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory