» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் 5 நாட்கள் விளையாடி புஜாரா சாதனை!!

செவ்வாய் 21, நவம்பர் 2017 12:47:01 PM (IST)டெஸ்ட் போட்டியில் 5 நாள்கள் விளையாடி புஜாரா புதிய சாதனை படைத்துள்ளார். 

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. 5 வது நாளான்று போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் 5 நாள்கள் விளையாடி புஜாரா புதிய சாதனை படைத்துள்ளார். 117 பந்துகளில் 52 ரன்களை எடுத்தார் புஜாரா. 

5 வது நாளாக இன்றும் புஜாரா தொடர்ந்து விளையாடி ஏற்கெனவே இருந்த சாதனையை முறியடித்துள்ளார். இந்த சாதனையில் உலக அளவில் 8 வது இடத்தையும், இந்திய அளவில் 3 வது இடத்தையும் பிடித்துள்ளார். எம்,எல்.ஜெய்சிம்ஹா மற்றும் ரவி சாஸ்திரி, புஜாராவுக்கு முன்னர் இந்த சாதனையை படைத்துள்ளனர். மூன்று இந்திய வீரர்களும் கொல்கத்தா ஈடன் மைதானத்தில் விளையாடி இந்த சாதனையை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph MarketingNew Shape TailorsThoothukudi Business Directory