» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

புவனேஸ்வர் குமார் விலகல்: இந்திய அணியில் தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு!

செவ்வாய் 21, நவம்பர் 2017 10:54:34 AM (IST)இலங்கைக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளுக்கு வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வாகியுள்ளார்.

திருமணம் நடைபெறவுள்ளதால் கடைசி இரு டெஸ்டுகளிலிருந்து புவனேஸ்வர் குமார் விலகியுள்ளார். அதேபோல தனிப்பட்டக் காரணங்களுக்காக 2-வது டெஸ்டில் இருந்து மட்டும் ஷிகர் தவன் விலகியுள்ளார். 3-வது டெஸ்டின்போது தவன் இந்திய அணியுடன் இணைந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெஸ்ட் தொடரின் கடைசி இரு டெஸ்டுகளுக்கு புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார். 

தமிழ்நாடு ஒருநாள் அணியின் கேப்டனாக உள்ள விஜய் சங்கர், 32 முதல்தரப் போட்டிகளில் 1671 ரன்களும் 27 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். சமீபகாலமாக இந்திய ஏ அணியில் இடம்பெற்ற விஜய் சங்கர், தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார். நாகபுரியில் தொடங்கவுள்ள 2வது டெஸ்டில் தவனுக்குப் பதிலாக முரளி விஜய் களமிறங்கவுள்ளார். புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக ரஞ்சி போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி வரும் இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors


Joseph MarketingThoothukudi Business Directory